‘அந்நியன்’ ரீமேக் இப்போது இல்லை: ஷங்கர் உறுதி

‘அந்நியன்’ ரீமேக் இப்போது இல்லை: ஷங்கர் உறுதி
Updated on
1 min read

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘அந்நியன்’. இந்தப் படத்தை ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார்கள். டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. தயாரிப்பாளர், இயக்குநர் ஷங்கர், ரன்வீர் சிங் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தை முடித்துள்ள ஷங்கர், அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் மும்பையில் அவரிடம் ‘அந்நியன்’ ரீமேக் பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஷங்கர், இப்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.“இந்தி ரீமேக்குக்கு முதலில் திட்டமிட்டிருந்தோம். அதை விட பெரிய படத்தை நான் இயக்க வேண்டும் என்று எங்கள் தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள். அதனால் அந்தப் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் வெளியான பிறகு அதை என்ன செய்யலாம் என்று முடிவெடுப்போம்” என்றார் ஷங்கர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in