நடிகை ஹினா கானுக்கு புற்றுநோய்: இன்ஸ்டாவில் உருக்கம்
பிரபல இந்தி நடிகை ஹினா கான். பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள இவர், ‘நாகினி’தொடரில் நடித்ததன் மூலம் மற்ற மொழிகளிலும்பிரபலமானார். இவர், தான் புற்றுநோயால்பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு மூன்றாம் நிலைமார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. நான் வலிமையானவள், உறுதியானவள், இந்த நோயை வெல்வேன் என்று நம்புகிறேன். சிகிச்சை தொடங்கிவிட்டது. தயவு செய்து எனது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கி றேன்” என்று கூறியுள்ள ஹினா கான், இந்தப் பயணத்தில் உங்கள் தனிப்பட்ட அனுபவங்கள், ஆதரவான பரிந்துரைகள் எனக்கு உதவும் என்றும் உங்கள் பிரார்த்தனைகள், ஆசிகள் தேவை என்றும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்தி திரையுலகினர் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
