‘தங்கல்’ இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு

‘தங்கல்’ இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு
Updated on
1 min read

‘தங்கல்’ படத்தை இயக்கிய நிதேஷ் திவாரியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான பாலிவுட் படம் ‘தங்கல்’. நிதேஷ் திவாரி இயக்கிய இந்தப் படத்தில், ஆமிர் கான், சாக்‌ஷி தன்வார், ஃபாத்திமா சனா, ஸைரா வசிம் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆமீர் கான், கிரண் ராவ், சித்தார்த் ராய் கபூர் இணைந்து தயாரித்த இந்தப் படம், உலகம் முழுவதும் வெளியாகி, இரண்டாயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மல்யுத்த வீரரான ஆமிர் கானுக்கு, இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்று தர வேண்டும் என்பது ஆசை. தன்னால் முடியாத ஆசையைத் தன் மகனைக் கொண்டு நிறைவேற்றலாம் என்று நினைத்தவருக்கு, வரிசையாக நான்கு பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். இதனால், மனம் நொடிந்து போகிறார் ஆமீர் கான். இந்நிலையில், தன் இரண்டு மகள்களுக்கு மல்யுத்தத்தில் ஆர்வம் இருப்பது தெரியவர, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்கள் மூலம் தன் கனவை நினைவாக்கிக் கொள்வதுதான் கதை.

‘தங்கல்’ மிகப்பெரிய ஹிட் என்பதால், நிதேஷ் திவாரி அடுத்து என்ன படத்தை இயக்கப் போகிறார் என்பது பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், அவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் சஜித் நடியத்வாலா இருவரும் இணைந்து அடுத்த படத்தைத் தயாரிக்கின்றனர். நடிகர் - நடிகைகள் உள்ளிட்டவர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“அடல்ட் படங்கள் எடுப்பதில் தவறில்லை. ஆனால்...” - கிருத்திகா உதயநிதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in