இயக்குநருக்கு நடிகை அவதூறு நோட்டீஸ்

இயக்குநருக்கு நடிகை அவதூறு நோட்டீஸ்
Updated on
1 min read

ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் நடித்தவர் திகங்கனா சூர்யவன்ஷி. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார்.

இவர், இந்தி நடிகை ஜீனத் அமனுடன் இணைந்து நடித்துள்ள வெப் தொடர், 'ஷோ ஸ்டாப்பர்'. மணீஷ் ஹரிசங்கர் தயாரித்து, இயக்கியுள்ளார்.

இவர், சமீபத்தில் இந்த வெப் தொடரை வழங்குவதற்கு நடிகர் அக்‌ஷய் குமாரிடம் தான் பேசுவதாகவும். இதற்காக தனக்கு ரூ.75 லட்சமும் அக்‌ஷய் குமார் பெயரில் ரூ.6 கோடியும் வேண்டும் என்று திகங்களா கேட்டதாகவும் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் போலீஸில் புகார் கூறியிருந்தார்.

இது பரபரப்பானது. இந்நிலையில் இயக்குநர் மணீஷ் ஹரிசங்கர் மீது திகங்கனா அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் அவர் மீது ஐபிசி 420, 406 உட்பட 11 பிரிவுகளின் கீழ் போலீஸிலும் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி பேசிய திகங்கனா, "இயக்குநர் மணீஷ் கூறிய அனைத்தும் பொய், வெப் தொடர் உருவாகி 2 வருடம் ஆகியும் விற்க முடியவில்லை என்பதால் விளம்பரத்துக்காக இப்படி செய்துள்ளார். இதுபற்றி விளக்கி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in