

மும்பை: பிரபல இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன். அனிஸ் பாஸ்மி இயக்கத்தில் இவர் நடித்த ‘பூல் புலையா 2’, 2022-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார், கார்த்திக் ஆர்யனுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள மெக்லேரன் ஜிடி (McLaren GT) ஸ்போர்ட்ஸ் காரை பரிசாக வழங்கினார்.
இந்தியாவில் வாங்கப்பட்ட முதல் மெக்லேரன் கார் அது. இந்நிலையில் சமீபத்தில் அவரிடம் அந்த காரை ஓட்டுகிறீர்களா? என்று கேட்டபோது, “எப்போதாவதுதான் ஓட்டிச் செல்வேன். அது அதிக நாட்கள் கேரேஜில் இருந்ததால், எலிகள் புகுந்து, இருக்கை உட்பட பலவற்றை கடித்துக் குதறிவிட்டன. அதை சரி செய்ய பல லட்சம் ரூபாய் செலவு செய்தேன்” என்று கூறியுள்ளார்.