உணவக ஊழியர்களுடன் உற்சாக செல்ஃபி எடுத்துக் கொண்ட ரன்வீர் - தீபிகா தம்பதியர்!

உணவக ஊழியர்களுடன் ரன்வீர், தீபிகா
உணவக ஊழியர்களுடன் ரன்வீர், தீபிகா
Updated on
1 min read

மும்பை: நட்சத்திர தம்பதியரான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன், மும்பையில் உள்ள உணவக ஊழியர்களுடன் உற்சாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்தப் படத்தை உணவக நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

தங்கள் குடும்பத்துடன் இரவு நேர உணவுக்கு ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியர் அண்மையில் வந்துள்ளனர். இந்த செல்ஃபி அப்போது தான் எடுக்கப்பட்டுள்ளது. தங்களது முதல் குழந்தையை இந்த தம்பதியர் எதிர்நோக்கி உள்ளனர். தீபிகா படுகோன் கர்ப்பம் அடைந்துள்ளது குறித்த தகவல் கடந்த பிப்ரவரியில் வெளியாகி இருந்தது.

அவர்களுடன் தீபிகாவின் தாயார் உஜ்ஜாலா மற்றும் ரன்வீரின் பெற்றோரும் வந்திருந்தனர். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி கவனம் பெற்றிருந்தது. தீபிகா, பிரபாஸ், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ரன்வீர் ‘சிங்கம் அகைன்’ படத்தில் நடித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in