27 வருடங்களுக்குப் பின் இணைந்து நடிக்கும் பிரபுதேவா - கஜோல்!

27 வருடங்களுக்குப் பின் இணைந்து நடிக்கும் பிரபுதேவா - கஜோல்!
Updated on
1 min read

சென்னை: 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர்கள் பிரபு தேவாவும், கஜோலும் இணைந்து நடிக்கின்றனர். பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

1997-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் பிரபுதேவாவும் - கஜோலும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இருவரின் நடிப்பில் உருவான ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் கல்ட் கிளாசிக்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட் படம் ஒன்றுக்காக இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ‘மஹாராக்னி’ (Maharagni) என தலைப்பிடப்பட்டுள்ளது. சரந்தேஜ் உப்பளபதி இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு இயக்குநரான இவர் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில், பிரபுதேவா, கஜோல் தவிர்த்து, நசீருதின் ஷா, சம்யுக்தா, ஜிஷு சென் குப்தா, ஆதித்ய சீல், சாயா கதம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

க்ளிம்ஸ் வீடியோ எப்படி? - தொடக்கத்திலேயே பிரபு தேவா ஸ்டைலான நடனத்துடன் ‘மாஸ்’ இன்ட்ரோ கொடுக்கிறார். சம்யுக்தா இதுவரை பார்த்திராத கார் ரேஸர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை வீடியோ உறுதி செய்கிறது. இறுதியில் கஜோலின் என்ட்ரி அட்டகாசம். கையில் கத்தியை வைத்துக்கொண்டு, தன்னை நோக்கி வரும் எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார். ஆக்ரோஷம் - ஆக்ஷனுடன் அவரின் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. க்ளிம்ஸ் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in