

‘மாம்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்காக விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த நடிகைக்கான விருது, ‘மாம்’ படத்தில் நடித்ததற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரவி உத்யவார் இயக்கிய இந்தப் படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், பயாலஜி டீச்சராகவும் இந்தப் படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி. க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்தில், நவாஸுதீன் சித்திக் துப்பறியும் அதிகாரியாக நடித்திருப்பார்.
300 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு கிடைத்துள்ள முதல் தேசிய விருது இது. அதை வாங்க அவர் உயிருடன் இல்லை என்பதுதான் சோகம்.