

பிரபல பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர், நீச்சல் வீரர் என பல முகங்கள் கொண்டவர் மிலிந்த் சோமன் (52). ஸ்காட்லாந்தில் பிறந்தவர். தமிழில் ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘வித்தகன்’, ‘பையா’, ‘பச்சைக் கிளி முத்துச்சரம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பிரான்ஸ் நடிகையான மைலேன் ஜம்பனோய் என்பவரை 2006-ல் காதலித்து திருமணம் செய்தார். இருவரும் 2009-ல் பிரிந்தனர். பிறகு, விமானப் பணிப்பெண்ணான அங்கிதா கொன்வாரை (27) காதலித்து வந்தார். தற்போது அவரை திருமணம் செய்துள்ளார்.