இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் நடிகை மனிஷா கொய்ராலா சந்திப்பு

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் நடிகை மனிஷா கொய்ராலா சந்திப்பு
Updated on
1 min read

இங்கிலாந்து: பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரில் சந்தித்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது தொடர்பாக மனிஷா கொய்ராலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இங்கிலாந்து - நேபாளம் இடையிலான உறவு மற்றும் ‘நட்பு ஒப்பந்தம்’ 100 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அது தொடர்பான கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததை கவுரவமாக கருதுகிறேன். பிரதமர் ரிஷி சுனக், நேபாளத்தைப் பற்றி அன்புடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

எவரஸ்ட் மலையேற்றத்துக்கு வருவமாறு பிரதமர் மற்றும் அவரது குடும்பத்துக்கு அழைப்பு விடுத்தேன். மேலும், நிகழ்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் ‘ஹீராமண்டி’ வெப்சீரிஸை கண்டு ரசித்ததாக கூறியது ஆச்சரியமாக இருந்தது. சிலிர்த்துப் போனேன்” என நெகிழ்ந்துள்ளார். மேலும், பிரதமர் ரிஷி சுனக்குடன் அவர் எடுக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

மனிஷா கொய்ராலா நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதும், தன்னுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வில் அவர் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in