தேர்தலில் வென்றால் சினிமாவுக்கு முழுக்கு: கங்கனா ரனாவத் முடிவு

தேர்தலில் வென்றால் சினிமாவுக்கு முழுக்கு: கங்கனா ரனாவத் முடிவு
Updated on
1 min read

மண்டி: நடிகை கங்கனா ரனாவத், நடந்துவரும் மக்களவைத் தேர்தலில் இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், சினிமாவில் இருந்து விலகிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “திரையுலகம் பொய்யானது. அங்கு எல்லாமே போலிதான். பார்வையாளர்களைக் கவர்வதற்காகப் பொய்யான உலகை உருவாக்குகிறார்கள். இதுதான் யதார்த்தம். நான்உணர்ச்சி வசப்படும் நபர். அதனால்தான் நடிப்பு போரடித்தால் கதை, இயக்கம், தயாரிப்பு என்று சென்றுவிடுகிறேன். இப்போதுஅரசியலுக்கு வந்துவிட்டேன். மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் நடிக்க வேண்டிய படங்களை முடித்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in