

மீண்டும் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க இருப்பதால், செம குஷியில் இருக்கிறார் தாப்ஸி.
‘ஆடுகளம்’ படத்தில் தனுஷ் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் தாப்ஸி. ஆனால், இந்த வெள்ளாவித் தேவதையைத் தமிழ் சினிமா அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. எனவே, தெலுங்கு, மலையாளம் என்று கவனம் செலுத்தியவர், தற்போது பாலிவுட்டில் பயங்கர பிஸி.
அமிதாப் பச்சனுடன் தாப்ஸி இணைந்து நடித்த ‘பிங்க்’, பிளாக்பஸ்டர் ஹிட். 23 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், கிட்டத்தட்ட 110 கோடியை வசூலித்தது. எனவே, அமிதாப் பச்சன் - தாப்ஸி கூட்டணி மறுபடி இணைகிறது. இந்தப் படத்தை சுஜாய் கோஷ் இயக்குகிறார்.
இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது. மீண்டும் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க இருப்பதால், செம குஷியில் இருக்கிறார் தாப்ஸி.