

சல்மான் கானுடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா.
அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் உருவாகும் பாலிவுட் படம் ‘பரத்’. 2014 ஆம் ஆண்டு வெளியான தென் கொரியன் படமான ‘ஒடே டு மை ஃபாதர்’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தில் ஹீரோவாக சல்மான் கான் நடிக்க, ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகியுள்ளார்.
“ஒரு இடைவேளைக்குப் பிறகு சல்மான் கான் மற்றும் அலியுடன் இணைந்து பணியாற்றப் போகிறேன். இதற்கு முன் இருவருடனும் பணியாற்றியபோது, அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். எனவே, இந்தப் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
‘குவாண்டிகோ’ ஹாலிவுட் சீரியலின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்புக்காக தற்போது அயர்லாந்தில் இருக்கிறார் பிரியங்கா சோப்ரா.