

மும்பை: கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம்ரவி, ராஷி கன்னா நடித்து வெளியான படம், ‘அடங்கமறு’. இந்தப் படம் இந்தியில் ‘சங்கி’ என்ற பெயரில் ரீமேக் ஆவதாகக் கூறப்பட்டது. இதில் சுனில் ஷெட்டி மகன் அஹான் ஷெட்டி, பூஜா ஹெக்டே நடிக்கின்றனர். அட்னன் ஷேக், யாஷிர் ஷா இயக்குகின்றனர். இந்நிலையில் இது ‘அடங்கமறு’ படத்தின் ரீமேக் இல்லை என்றும் சஜித் நாடியத்வாலா உருவாக்கிய காதல் கதை என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
“அடங்கமறு படத்தை, வருண் தவண் நடிப்பில் தயாரிக்க இருந்தார் சஜித். கரோனாவுக்கு பிறகு சூழல் மாறிவிட்டதால் அடுத்த வருடம் அந்தப் படத்தின் ரீமேக்கை தொடங்க இருக்கிறார். அஹான் ஷெட்டி நடிக்கும் இந்தப் படம், காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது. அடுத்த வருடம் பிப்.14ம் தேதி வெளியாகும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது