

தமிழில் ‘பார்ட்டி’, ‘மிஸ்டர் சந்திரமவுலி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை ரெஜினா கசென்ட்ரா ஹிந்தியில் உருவாகும் ‘எக் லட்கி கொ டெகா டு ஐசா லஹா’ (Ek Ladki Ko Dekha Toh Aisa Laga) படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் தடம் பதிக்கிறார். இதற்கு முன்பே அபிதாப் பச்சன் நடிப்பில் உருவாகவிருந்த ஒரு படத்தில் நடிப்பதற்காக அவர் ஒப்பந்தமானார். அப்பட வேலைகள் உடனடியாக தொடங்கவில்லை. இந்நிலையில் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் அனில் கபூர், ஜுஹி சாவ்லா, சோனம் கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தற்போது ரெஜினா கசண்ட்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.