“மம்மூட்டி கதாபாத்திரத்தில் ‘கான்’கள் நடிக்க வாய்ப்பு இல்லை!” - வித்யாபாலன் கருத்து

“மம்மூட்டி கதாபாத்திரத்தில் ‘கான்’கள் நடிக்க வாய்ப்பு இல்லை!” - வித்யாபாலன் கருத்து
Updated on
1 min read

மும்பை: “மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்து அந்தப் படத்தை தானே தயாரிக்கவும் செய்துள்ளார். ‘காதல் தி கோர்’ போன்ற ஒரு படத்தில், மம்மூட்டி நடித்த கதாபாத்திரத்தில் நம்முடைய பாலிவுட் ‘கான்’கள் நடிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை” என நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் பேசியுள்ள அவர், “கேரளாவில் கல்வியறிவு அதிகமுள்ள பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சமூகத்தை பிரதிபலிக்கும் விஷயங்களை செய்வது அங்கே எளிதாக இருக்கலாம். தென்னிந்திய ரசிகர்கள் ஆண் சூப்பர் ஸ்டார்களை கொண்டாடித் தீர்க்கிறார்கள். அப்படியிருக்கும்போது, மம்மூட்டி மேற்கொண்டுள்ள முன்னெடுப்பு பாராட்டதக்கத்து.

‘காதல் தி கோர்’ படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார். தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான ஆதரவோ, அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை சமூகத்தில் பரவலாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதேபோல, ‘காதல் தி கோர்’ போன்ற ஒரு படத்தில் நம்முடைய பாலிவுட் ‘கான்’கள் நடிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.

அதேசமயம் இன்றைய தலைமுறையினர் அந்தக் கருத்தை உடைப்பார்கள் என நம்புகிறேன். உதாரணமாக, ஆயுஷ்மான் குர்ரானா ‘Shubh Mangal Zyada Saavdhan’ படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in