“அப்பாவிடம் செல்வது போல உணர்கிறேன்” - இர்ஃபான் கான் மகனின் பதிவால் சர்ச்சை

“அப்பாவிடம் செல்வது போல உணர்கிறேன்” - இர்ஃபான் கான் மகனின் பதிவால் சர்ச்சை
Updated on
1 min read

மும்பை: மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘“அப்பாவிடம் செல்வது போல உணர்கிறேன்” என்று வைத்த ஸ்டோரி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்பட்ட இர்ஃபான் கானின் மறைவு பாலிவுட் மட்டுமின்றி இந்திய திரைத் துறையினர், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு சினிமாவில் நடித்து வருகிறார். நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தி ரயில்வே மென்’ என்ற தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இர்ஃபான் கானின் நினைவு தினம் வரும் 29ஆம் தேதி வரவிருக்கும் நிலையில், பாபில் கான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'சிலநேரம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அப்பாவிடம் செல்வது போல உணர்கிறேன்' என்று பதிவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நெட்டிசன்கள் பலரும் அது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்து 'பாபில் கானுக்கு என்ன ஆச்சு?' என்று கேள்வியெழுப்பினர். இதனையடுத்து சில மணி நேரங்களில் அந்த பதிவை பாபில் கான் தனது ஸ்டோரியில் இருந்து நீக்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in