

மும்பை: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கியாரா அத்வானி இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார்.