சல்மான் கான் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் ‘சிக்கந்தர்’ 2025 ரம்ஜானுக்கு வெளியீடு

சல்மான் கான் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் ‘சிக்கந்தர்’ 2025 ரம்ஜானுக்கு வெளியீடு

Published on

மும்பை: சல்மான் கான் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்துக்கு 'சிக்கந்தர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது

‘தர்பார்’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. சல்மான் கான் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்துக்கு 'சிக்கந்தர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்த சல்மான் படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார்.

'சிக்கந்தர்' திரைப்படம் 2025ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகும் எனவும் சல்மான் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதை சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார்.

ரவிதேஜா நடித்து தெலுங்கில் ஹிட்டான படம் ‘கிக்'. இதன் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தார். அதன் அடுத்த பாகமான ‘கிக் 2’ தான் 'சிக்கந்தர்' பெயரில் எடுக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in