‘ராமாயணம்’ படத்தில் நடிக்க சாய் பல்லவி சம்பளம் ரூ.10 கோடி?

‘ராமாயணம்’ படத்தில் நடிக்க சாய் பல்லவி சம்பளம் ரூ.10 கோடி?
Updated on
1 min read

மும்பை: பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயண கதையை மூன்று பாகங்களாக இயக்குகிறார். இதில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் ராவணனாக யாஷும் நடிக்கின்றனர். அனுமனாக சன்னி தியோல் நடிக்கிறார். சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. இதன் படப்பிடிப்பில் ரவீனா டாண்டன், அருண் கோவில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் யாஷ் தொடர்பான காட்சிகள் வர இருப்பதால் அவருக்கான படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் கழித்து தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவிக்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in