அக்ஷய் கண்ணா, ரிச்சா நடிப்பில் பாலியல் குற்றங்கள் பற்றிப் பேசும் செக்ஷன் 375

அக்ஷய் கண்ணா, ரிச்சா நடிப்பில் பாலியல் குற்றங்கள் பற்றிப் பேசும் செக்ஷன் 375
Updated on
1 min read

நடிகர்கள் அக்ஷய் கன்னா மற்றும் ரிச்சா சதா நடிக்கும் படம் செக்ஷன் 375. ஒரு சஸ்பென்ஸ் கதையை மையமிட்டிருக்கும் இப்படம் பாலியல் வன்புணர்வு குறித்தும் 375  சட்டம் நாட்டில் எவ்வளவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறித்தும்  பேசுகிறது. இப்படத்தை பனோரமா ஸ்டூடியோஸ்க்காக குமார் மங்கத் பதக் தயாரிக்க மனிஷ் குப்தா இயக்குகிறார்.

இத்திரைப்படத்தை இயக்குவதற்காக பாலியல் குற்ற வழக்குகளைப் பற்றி தவறின்றி அறிந்துகொள்வதற்காக 2 ஆண்டுகள் சிறப்பு நீதிமன்றங்களில் முழுநேரத்தைச் செலவிட்டிக்கிறார் மனிஷ் குப்தா.

இப்படம் பற்றி இயக்குநர் மனீஷ் குப்தா தெரிவிக்கையில்,

ஒரு பாலியல் வழக்கை மையமிட்டே இப்படத்தின் கதை சுழல்கிறது. அந்த வழக்கு இயல்பாக மிகவும் தெளிவற்றதாக இருப்பதால் இந்த சம்பவம் ஒரு பாலியல் வன்புணர்வுதானா அல்லது அது வெறும் இணக்கமான பாலியல் உறவா என்பதை நீதிபதிகள் தீர்மானிக்க முடியாமல் திணறுகிறார்கள். இப்படத்தில் வரும் பாலியல் வழக்கு பற்றி ஆராயும்போது,  எது உண்மை எது போலி என்றே தெரியாத அளவில் நீதித்துறையும் காவல்துறையும் ஒரேமாதிரி குழம்புகின்றன.

ஒருவகையில், இத்திரைப்படம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடும் ஒரு டிபென்ஸ் வழக்கறிஞரைப் பற்றியதாகவும் விரிகிறது.

இதில் டிபென்ஸ் வழக்கறிஞராக அக்ஷய்யும், அரசு வழக்கறிஞராக ரிச்சாவும் நடித்திருக்கிறார்கள். இருவருமே தங்கள் கட்சிக்காரர் நல்லவர் என்றும் எதிராளிதான் குற்றவாளி என்றும் வாதாடி மறுக்கமுடியாத சான்றுகளையும் நீதிபதியின் முன் வைக்கின்றனர். இதனால் எது நிஜம் என்பது பற்றிய குழப்பத்திற்கு நீதிபதிகள் தள்ளப்படுகின்றனர்.

இந்த திரைப்படத்தின் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, நான் இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் பல வழக்குகளின் விசாரணைகளின்போது உடன் கலந்து கொண்டேன்.

அந்த நீதிமன்றங்கள் எல்லாமே பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் பெண் நீதிபதிகளை மட்டுமே கொண்ட சிறப்பு நீதிமன்றங்கள் ஆகும்.

மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கிய பெண்கள், அவர்களது குடும்பங்கள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் இரு தரப்பினருக்காகவும் வாதாடிய வழக்கறிஞர்கள் ஆகியவர்களை நான் சந்தித்தேன்.

இந்த மாதிரி வழக்குகளில் சிக்கியவர்களில் மீண்டும் வாழத் தொடங்கிய பெண்களோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களோ மட்டும் இல்லை அவர்களது குடும்பத்தாரும் நிம்மதியின்றி இருப்பதை நான் கண்டேன்'' என்றார் இப்படத்தின் இயக்குநர் மனீஷ் குப்தா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in