“இந்துஸ்தானை விரும்பும் அனைவரும் இந்துக்களே” - ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ ட்ரெய்லர் எப்படி?

“இந்துஸ்தானை விரும்பும் அனைவரும் இந்துக்களே” - ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

மும்பை: ரன்தீப் ஹூடா இயக்கி நடித்த ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. ரன்தீப் ஹூடா இயக்கி நடித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை ரன்தீப் உடன் உட்கார்ஷ் நைதானி என்பவரும் எழுதியுள்ளார். இப்படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - அந்தமானின் காலாபாணி சிறையில் சாவர்க்கர் நடந்து செல்லும் காட்சியோடு ட்ரெய்லர் தொடங்குகிறது. “அகிம்சை மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம், ஆனால் இது அந்தக் கதை அல்ல” என்று பின்னணியில் வரும் வாய்ஸ் ஓவரோடு, சிறையில் சாவர்க்கர் பட்ட துன்பங்கள் காட்டப்படுகின்றன. வன்முறை தீர்வல்ல என்று கூறும் மகாத்மா காந்தியிடம், வெள்ளையரை முழுதாக விழுங்கக்கூடிய மக்களை நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சாவர்க்கர் பேசுவதாக வரும் வசனம் கவனிக்க வைக்கிறது. ட்ரெய்லரின் பரபரப்பான காட்சிகளுக்கு பின்னணி இசையும், சீரியஸ்தன்மை கொண்ட ஒளிப்பதிவும் வலு சேர்க்கின்றன. ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in