‘தங்கல்’ பட குழந்தை நட்சத்திரம் சுஹானி காலமானார்

‘தங்கல்’ பட குழந்தை நட்சத்திரம் சுஹானி காலமானார்
Updated on
1 min read

ஹரியானா: ஆமிர்கானின் ‘தங்கல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 19.

கடந்த 2016-ம் ஆண்டு ஆமிர்கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான பாலிவுட் படம் ‘தங்கல்’. பெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தில் ஆமிர்கானின் மகளாக பபிதா போகட் என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் சுஹானி பட்நாகர். இந்தப் படத்துக்குப் பிறகு, அவர் நடிப்பிலிருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

ஹரியாணாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. மேலும், இதற்காக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 19 வயதேயான அவரது இறப்பு குறித்த முழுமையான காரணம் தெரியவில்லை.

இது தொடர்பாக ஆமிர்கானின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “எங்கள் சுஹானி காலமானது வேதனையளிக்கிறது. அவரது தாயார் பூஜாவுக்கும், ஒட்டுமொத்த குடும்பத்தாருக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். திறமையான அவர் இன்றி ‘தங்கல்’ படம் முழுமையடைந்து இருக்காது. சுஹானி, எப்போதும் எங்கள் இதயங்களில் ஒரு நட்சத்திரமாக இருப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in