மணிரத்னம் பட நாயகியாக மீண்டும் அதிதி ராவ் ஒப்பந்தம்

மணிரத்னம் பட நாயகியாக மீண்டும் அதிதி ராவ் ஒப்பந்தம்
Updated on
1 min read

பத்மாவத் திரைப்படத்தில் குறைந்த அளவே தோன்றினாலும் ரசிகர்கள் பாராட்டு அளித்துவருவதற்கு நன்றி தெரிவித்த பாலிவுட் நடிகை அதிதி ராவ் தான் மீண்டும் இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க உள்ளதை உறுதிபடுத்தினார்.

அதிதி கடைசியாக இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றிய படம் கடந்த ஆண்டு வெளியான 'காற்று வெளியிடை'.

இதுகுறித்து பேசிய அதிதி, ''என்னைப் பொறுத்தவரை 2018க்கு ஒரு சிறந்த தொடக்கத்தை என்னால் எதிர்பார்க்க முடியாது. 'பத்மாவத்' திரைப்படத்திற்கு பாராட்டி விமர்சனங்கள் வருவதை நான் எதிர்பார்க்கவேயில்லை. ஏனெனில் இப்படத்தில் பெரிய அளவில் நான் நடிக்கவில்லை. இப்பொழுது, காற்று வெளியிடை வெளியான  ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னத்துடன் படத்தில் நடிக்கப் போகிறேன்" என்றார்.

மணிரத்னத்தின் இரண்டு வெற்றிகரமான புராஜெக்ட்கள், இதற்கு, மணிரத்னத்தின் புதிய உத்வேகமாக அதிதி ராவ் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்? என்ற கேள்விக்கு பதிலளித்த அதிதி, "நான் அப்படியே இருக்க விரும்புகிறேன்.(சிரிப்பு), மணி சார் உடன் நடிப்பதற்கு எந்த நடிகை விரும்பவில்லை. அதுகூட ஒரு வருடத்தில் இரண்டுமுறையா? நான் காற்று வெளியிடை படத்தில் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொண்டேன். மதிப்புமிக்க ஒரு படைப்போடு நான் மீண்டும் வருகிறேன்.

இப்புதிய படம், காற்றுவெளியிடை போல இது நிச்சயம் இருக்காது. இதில், நான் எனது சொந்தக் குரலில் தமிழ் வசனங்களைப் பேசுவேன். 'காற்று வெளியிடை'க்காக, நான் தமிழ் மொழியை விடா முயற்சியுடன் கற்றறிந்தேன், அப்போது அதன் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். ஆனால் எதிர்பாராமல், தன் பணியை அற்புதமாக செய்த ஒருவரின் குரலில் எனக்கு டப் செய்யப்பட்டது.

இம்முறை எனது சொந்தக் குரலில் பேச முயற்சித்து வருகிறேன். ஆனால் இவ்விஷயத்தில் மணி சார் முடிவு எதுவென்றாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன்..'' என்றார் உற்சாகம் குறையாமல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in