பூனம் பாண்டே மீது வழக்கு பதிய கோரிக்கை

பூனம் பாண்டே மீது வழக்கு பதிய கோரிக்கை
Updated on
1 min read

நடிகை பூனம் பாண்டே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார் என்று அவர் மேலாளர் அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்திவெளியிட்டார். இது உண்மை என நம்பி திரைபிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் தான் இறக்கவில்லை என்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காகவே அவ்வாறு பொய் செய்தி பரப்பினேன் என்றும் பூனம் பாண்டேகூறியிருந்தார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரை ரசிகர்கள் விமர்சித்தனர். அவர் செயலை திரை பிரபலங்களும் கண்டித்தனர். இந்நிலையில் ‘பூனம் பாண்டேவின் செயல் தவறானது, ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றும் அவர் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.எல்.சி.,சத்யஜீத் தாம்பே-வும் இதை வலியுறுத்தியுள்ளார். விளம்பரத்துக்காக இதுபோன்று நடந்துகொள்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பது போல சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதே போல பலர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in