மோசமான பப்ளிசிட்டி ஸ்டன்ட்: பூனம் பாண்டே பதிவு குறித்து ரசிகர்கள் ஆவேசம்

மோசமான பப்ளிசிட்டி ஸ்டன்ட்: பூனம் பாண்டே பதிவு குறித்து ரசிகர்கள் ஆவேசம்
Updated on
1 min read

மும்பை: பிரபல சர்ச்சை நடிகை பூனம் பாண்டே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமை இரவு இறந்துவிட்டதாகச் செய்திகள் வெளியானது. அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் டீம் இதை தெரிவித்திருந்தது. அவர் மேலாளரும் உறுதி செய்திருந்தார். இதனால் அனைத்துமீடியாவும் அவர் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்டது. கங்கனா ரனாவத், அனுபம் கெர்உட்பட பல நடிகர், நடிகைகளும் ரசிகர்களும் அவர் மறைந்து விட்டதாக இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் உயிருடன் இருப்பதாக, அவர் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே, அவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளார். மற்றொரு வீடியோவில், “எனது இறப்புச் செய்தி அறிந்துகண்ணீர் சிந்தியவர்களுக்காக வருந்துகிறேன். எனது நோக்கம், நாம் அதிகம் பேசப்படாத கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து பேச வைப்பதுதான்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது மோசமான ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’ என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல நல்ல வழிகள் இருக்கும்போது, இந்த மலிவான விளம்பரம் அருவருப்பானதாகவும் அவமானகரமாக இருப்பதாகவும் பலர்கூறியுள்ளனர். இது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும்மோசடி. யாராவது புகார் செய்தால் சட்டரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியதுதான் என்று தெரிவித்துள்ள சிலர், இதனால் இறந்ததாக பப்ளிசிட்டி செய்திருப்பது அந்த நோய்குறித்து தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும் என்றும் விமர்சித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in