Published : 30 Jan 2024 03:16 PM
Last Updated : 30 Jan 2024 03:16 PM

ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ 5 நாட்களில் ரூ.150 கோடி வசூல்!

மும்பை: ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஃபைட்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் குடியரசு தினத்தையொட்டி கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஃபைட்டர்’. ‘வார்’, ‘பதான்’ படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை விஷால் சேகர் இசையமைத்துள்ளார். ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் இந்தியாவில் ரூ.120 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலக அளவில் படம் ரூ.150 கோடி வசூலை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x