அனிமல் படத்துக்கு டாப்ஸி எதிர்ப்பு

அனிமல் படத்துக்கு டாப்ஸி எதிர்ப்பு
Updated on
1 min read

தமிழில், ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் உட்பட சில படங்களில் நடித்தவர் டாப்ஸி. இந்திப் படங்களில் இப்போது நடித்து வரும் அவர், பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரைக் காதலித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகிரூ.912 கோடி வசூலித்துள்ள ‘அனிமல்’ படம் பற்றி அவர் கூறியுள்ள கருத்து, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள ‘அனிமல்’ படம் பெண் வெறுப்பு, அதீத வன்முறையை கொண்டிருப்பதாகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் உட்பட பலர் இந்தப் படத்துக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதுபற்றி டாப்ஸியிடம் கேட்டபோது, “இதுபோன்ற ஒரு படத்தில் நான் நடிக்கவே மாட்டேன்” என்றார். அவர் மேலும் கூறும்போது, “அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால், அதுபற்றி பலர் கூறியிருக்கிறார்கள். ஹாலிவுட்டில் வெளியான, கான் கேர்ள் (Gone Girl) படத்தை ஒப்பிட்டு, அது பிடித்தால் ‘அனிமல்’ ஏன் பிடிக்கவில்லை? என்று கேட்கிறார்கள். ஹாலிவுட்டில் நடிகர், நடிகைகளின் ஹேர்ஸ்டைலை ரசிகர்கள் பின்பற்றுவதில்லை. அங்கு படம் பார்த்துவிட்டு யாரும் பெண்களைப் பின் தொடர்வதில்லை. ஆனால், நம் நாட்டில் இதெல்லாம் நடக்கிறது. இதுதான் யதார்த்தம். இதனால் நம் திரையுலகை, ஹாலிவுட்டோடு ஒப்பிட்டு 'அனிமல்' படம் பற்றி ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என்று கேட்கமுடியாது. அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in