2500+ விஐபி விருந்தினர்கள், 9 மாநில உணவு வகைகள் - பாலிவுட்டை அசத்த காத்திருக்கும் ஆமிர் கான்

2500+ விஐபி விருந்தினர்கள், 9 மாநில உணவு வகைகள் - பாலிவுட்டை அசத்த காத்திருக்கும் ஆமிர் கான்
Updated on
1 min read

பாலிவுட்டின் மெகா ஸ்டார் ஆமிர் கானுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி ரீனா தத்தா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் ஜுனைத் கான் மற்றும் மகள் ஐரா கான். ரீனா தத்தாவை விவாகரத்து செய்தபின் இரண்டாவதாக கிரண் ராவை திருமணம் செய்த ஆமிர் கான் அவரையும் பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஆமிர் கானின் மகள் ஐரா கான் தனது காதலன் நுபுர் ஷிகாரேவை திருமணம் செய்துள்ளார். உதய்பூரில் ஜனவரி 6 முதல் ஜனவரி 10 வரை ஐந்து நாட்கள் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. முன்னதாக, ஜனவரி 3-ம் தேதியே தம்பதிகள் இருவரும் தங்கள் திருமணத்தை மும்பையில் பதிவு செய்தனர். தற்போது அடுத்த நிகழ்ச்சியாக இன்று (ஜன.13) இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. மும்பையில் நடக்கவிருக்கும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஆமிர் கான் நடத்துகிறார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஷாருக் கான், சல்மான் கான், அம்பானி தவிர பாலிவுட் சினிமாவில் கோலோச்சும் கபூர் குடும்பம், பட் குடும்பம், தியோல் குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்பானி தனது கலாச்சார மையத்தை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வழங்கியுள்ளார். வரவேற்பில் சுமார் 2500+ விஐபி விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

9 மாநில உணவு வகைகள் வரவேற்பில் விருந்தினர்களுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், குஜராத்தி மெனு வகைகள் நிறைய இருக்கும் என்றும் லக்னோவி மற்றும் மகாராஷ்டிர உணவுகளும் பரிமாறப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ஆமிர் நேரடி ஏற்பாட்டில் இந்த திருமண வரவேற்பு நடப்பதால் மொத்த பாலிவுட்டும் இன்று நீடா அம்பானி கலாச்சார மையத்தில் குவிய வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in