

பிரபல இந்தி நடிகையும் நடிகைகள் கஜோல், தனிஷாவின் தாயாருமான தனுஜா (80) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை தனுஜா, 1960 மற்றும் 70 களில் முன்னணி நடிகையாக இருந்தார். ஹாத்தி மேரே சாத்தி, மேரே ஜீவன் சாத்தி, தோ சோர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சஞ்சீவ் குமார், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, உத்தம் குமார் உட்பட அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வந்த அவர், கடந்த வருடம் வெளியான ‘மாடர்ன்லவ்: மும்பை’ என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீ ரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பை ஜுஹுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.