Published : 09 Dec 2023 07:55 AM
Last Updated : 09 Dec 2023 07:55 AM

ஜன.19-ல் வாஜ்பாய் பயோபிக் ரிலீஸ்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி , வாஜ்பாயாக நடித்துள்ளார். படத்துக்கு 'மெயின் அடல் ஹூம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். ரவி ஜாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை வினோத் பானுஷாலி மற்றும் சந்தீப் சிங், கமலேஷ் பனுஷாலி தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் முதல் தோற்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பங்கஜ் திரிபாதி , வாஜ்பாய் போலவே இருப்பதாகப் பாராட்டப்பட்டது. மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாயின் பால்ய காலம், கல்லூரி நாட்கள் மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து இந்தப் படம் பேசும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜன. 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x