‘சிஐடி’ தொடரில் நடித்த தினேஷ் பட்னிஸ் காலமானார்

‘சிஐடி’ தொடரில் நடித்த தினேஷ் பட்னிஸ் காலமானார்

Published on

மும்பை: இந்தி நடிகர் தினேஷ் பட்னிஸ் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 57.

சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிஐடி’ என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் இவர். 1998ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் 2018-ம் அண்டு வரை ஒளிபரப்பானது. இதில் ஃபிரெட்ரிக்ஸ் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் தினேஷ் நடித்தார். மேலும் சில தொடர்களில் நடித்துள்ள இவர், சர்ஃபரோஷ், சூப்பர் 30 உட்பட சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த 1-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கல்லீரல் பிரச்சினை என்று கூறப்படுகிறது. செயற்கை சுவாச உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவர் இறுதிச் சடங்கு மும்பை போரிவிலியில் நேற்று நடந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in