

பத்மாவத் திரைப்படத்தின் வெற்றி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தந்துள்ளது என அப்படத்தில் நாயகி தீபிகா படுகோன் கூறியுள்ளார்.
தீபிகா படுகோன், சாகித் கபூர், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'பத்மாவத்'. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ராஜப்புத்திர ராணி. பத்மாவதியின் வரலாறு திரித்து சொல்லப்பட்டுள்ளதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியது. ராஜ்புத்திர கர்னி சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. எதிராக வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனால், உச்ச நீதிமன்றம் படத்தை திரையிட அனுமதி வழங்கியது.
கடந்த 25-ந்தேதி 'பத்மாவத்' திரைப்படம் திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்கிய 'பத்மாவத்' திரைப்படம் ரிலீசான 3 நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
இந்தப் படத்தில் நடித்ததற்காக தலையை வெட்டப்போவதாக தீபிகா படுகோனுக்கு மிரட்டல்கள் வந்தன. இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து தீபிகா படுகோன் கூறியதாவது:
‘பத்மாவத் படத்தின் வெற்றி வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவு சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் தந்துள்ளது. படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. பல வெற்றிப் படங்களை தந்துள்ள போதிலும், எனக்கு வெற்றி களிப்பு ஏற்பட்டதில்லை. பத்மாவத் படத்தின் மூலம் தற்போது வெற்றிக் களிப்பு ஏற்படுகிறது. பூமியில் சிறகடிப்பதாக உணர்கிறேன்’’ எனக் கூறினார்.