பாலிவுட்
‘டங்கி’ படத்துக்காக இந்தியா வரும் ஷாருக்கான் ரசிகர்கள்
மும்பை: பதான், ஜவான் படங்களின் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘டங்கி’. இதில் டாப்ஸி, போமன் இரானி, விக்கி கவுஷல் விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். இந்தப் படம் டிச. 21-ம் தேதி வெளியாகிறது.
நட்பைப் பற்றிய இந்தப் படத்தில், கதாபாத்திரங்கள் நாட்டின் எல்லைகளைச் சட்டத்துக்குப் புறம்பாக கடப்பதாகக் கதை அமைந்துள்ளது. இருந்தாலும் வெளிநாடுகளில் வாழும் ஷாருக்கான் ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்க சட்டப்பூர்வமான பயணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். கனடா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல நாடுகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்க, இந்தியா வர இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது
