சல்மான் கானின் ‘டைகர் 3’ ரூ.400 கோடி வசூல்

சல்மான் கானின் ‘டைகர் 3’ ரூ.400 கோடி வசூல்
Updated on
1 min read

மும்பை: சல்மான் கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டைகர் 3’ திரைப்படம் உலக அளவில் 10 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இதை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார். இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ப்ரிதம் இசையமைத்துள்ளார்.

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

இந்நிலையில், வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ.400.50 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.298 கோடியையும், மற்ற நாடுகளில் ரூ.102 கோடியையும் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in