“கிருஷ்ணர் அருள் புரிந்தால் தேர்தலில் போட்டியிடுவேன்” - கங்கனா ரனாவத்

“கிருஷ்ணர் அருள் புரிந்தால் தேர்தலில் போட்டியிடுவேன்” - கங்கனா ரனாவத்
Updated on
1 min read

குஜராத்: “கிருஷ்ணர் அருள் புரிந்தால் தேர்தலில் போட்டியிடுவேன்” என மக்களவைத் தேர்தல் குறித்து நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள சோமநாத் கோயிலுக்குச் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‘நீங்கள் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டுயிடப்போவதாக கூறப்படுகிறதே?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “கிருஷ்ணர் அருள் புரிந்தால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அயோத்தி ராமர் கோயில் குறித்து பேசிய அவர், “பாஜக அரசின் முயற்சியால் 600 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு மகத்தான நாளை காணப் போகிறோம். கொண்டாட்டங்களுடன் கோயில் திறப்பு விழா நடைபெறும். சனாதன தர்மத்தின் கொடி உலகம் முழுவதும் பறக்க வேண்டும்” என்றார் கங்கனா.

கங்கனா ரனாவத்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சந்திரமுகி 2’ மற்றும் ‘தேஜஸ்’ ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியை சந்தித்தன. ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ‘தேஜஸ்’ திரைப்படம் வெறும் ரூ.6 கோடியை வசூலித்து நஷ்டமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in