

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா 2021-ம் ஆண்டு, ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கரோனா காலத்தில் கஷ்டப்பட்ட நடிகைகளிடம் பண ஆசைக் காட்டி, வீடியோவில் நடிக்க வைத்து வெளிநாட்டு மொபைல் ஆப்களில் அவர் வெளியிட்டடாகக் கூறப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். 2 மாதம் கழித்து வெளியே வந்தார். இந்நிலையில் ராஜ் குந்த்ரா தனது சிறை வாழ்க்கையை ‘யுடி69’ என்றபெயரில் சினிமாவாக எடுத்து வருகிறார். இதில் அவரே நாயகனாகவும் நடிக்கிறார். இந்தப் படம் நவ.3ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் ராஜ் குந்த்ரா, "நாங்கள் பிரிந்துவிட்டோம்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள்அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு பதிவில்அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில்,“முகத்தில் இருந்து மாஸ்க்கை பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2 ஆண்டாக என்னைப் பாதுகாத்ததற்கு நன்றி” என்றுதெரிவித்துள்ளார். விசாரணை காலகட்டங்களில் மீடியாவிடம் இருந்து தப்பிக்க அவர் விதவிதமான மாஸ்க் அணிந்துவந்தது குறிப்பிடத்தக்கது.