3 நாளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்த பத்மாவத்

3 நாளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்த பத்மாவத்
Updated on
1 min read

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'பத்மாவத்' திரைப்படம், வெளியான 72 மணி நேரங்களில் ரூ. 56 கோடி வசூலை ஈட்டியுள்ளது. அடுத்து சில நாட்களில் ரூ. 100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபிகா படுகோன், சாகித் கபூர், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'பத்மாவத்'. ராஜப்புத்திர ராணி. பத்மாவதியின் வரலாறு திரித்து சொல்லப்பட்டுள்ளதாகக் கூறி, படத்தின் படப்பிடிப்பில் இருந்து திரைக்கு வந்தபின் ராஜ்புத்திர கர்னி சேனா அமைப்பினர் உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 25-ந்தேதி 'பத்மாவத்' திரைப்படம் திரைக்கு வந்தது.

ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்கிய 'பத்மாவத்' திரைப்படம் ரிலீசான 3 நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.

இது குறித்து வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் கூறுகையில்,  ''மும்பையில் 'பத்மாவத்' திரைப்படம் திரைக்கு வந்த 3 நாட்களில் ரூ.56 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இந்தப் படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் அந்த தொகையை எட்டி லாபத்தை ஈட்டத் தொடங்கிவிடும்'' எனத் தெரிவித்தார்.

நடிகை தீபிகா படுகோன் ட்விட்டரில் பதிவிடுகையில்,'' 'பத்மாவத்' திரைப்படம் 3 நாட்களில் ரூ.56 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதற்கு முன் எந்தப் படமும் இப்படி வசூலை ஈட்டியது இல்லை. என்னால் மகிழ்ச்சியையும், பெருமையையும் எப்படி வெளிப்படுத்துவது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. இந்த வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கும், சாகித்கபூர், பன்சாலி, ரன்வீர் ஆகியோருக்கு நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in