கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ ரிலீஸ் தேதி மாற்றம்

கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ ரிலீஸ் தேதி மாற்றம்

Published on

மும்பை: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகும் படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பை நிறைவு செய்த கங்கனா, நவ. 24ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தெரிவித்துள்ள கங்கனா, “நான் எங்கு சென்றாலும் ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றி கேட்கிறார்கள். நவ. 24ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தோம். இப்போது அடுத்த வருடத்துக்கு ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in