40 வயது ஆண்களை ‘அங்கிள்’ என்று அழைக்கிறார்களா? - பிரியாமணி கேள்வி

40 வயது ஆண்களை ‘அங்கிள்’ என்று அழைக்கிறார்களா? - பிரியாமணி கேள்வி
Updated on
1 min read

மும்பை: நடிகை பிரியாமணி, ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து அஜய் தேவ்கனின் ‘மைதான்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆண்கள் 40, 50 வயதைக் கடந்தாலும் அவர்களை யாரும் ‘அங்கிள்’ என்று அழைப்பதில்லை. ஆனால், பெண்கள் 30 அல்லது 35 வயதைத் தாண்டினாலே, ‘ஆன்ட்டி’ என்று அழைக்கத் தொடங்குகிறார்கள். இதைச் சொல்பவர்களும் நாளை இந்த வயதைக் கடக்கப் போகிறார்கள் என்பதை உணரவில்லை. நான் 39 வயதான அழகானப் பெண். உடல் அளவில் மிகவும் சரியாகவே இருக்கிறேன். ஆரம்பத்தில் இதுபோன்ற கருத்துகளால் வருத்தமடைந்தேன். பிறகு என்ன செய்தாலும் ஏதாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பதால், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். கருத்துச் சொல்கிற யாரோ ஒருவருக்கு பதில் சொல்வதன் மூலம் முக்கியத்துவமும் ஒரு நிமிட புகழையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இவ்வாறு பிரியாமணி தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in