சாலையில் மயங்கி விழுந்த நபருக்கு சிபிஆர் கொடுத்து காப்பாற்றிய நடிகர் குர்மீத்

சாலையில் மயங்கி விழுந்த நபருக்கு சிபிஆர் கொடுத்து காப்பாற்றிய நடிகர் குர்மீத்
Updated on
1 min read

மும்பை: சாலையில் மயங்கி விழுந்த நபர் ஒருவருக்கு உடனடியாக சிபிஆர் சிகிச்சை கொடுத்து அவரது உயிரை காப்பாற்ற போராடிய பாலிவுட் சின்னத்திரை நடிகர் குர்மீத் சவுத்ரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘ராமாயணம்’ சின்னத்திரை தொடரில் ராமராக நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் பாலிவுட் நடிகர் குர்மீத் சவுத்ரி. பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்தவர், 2015-ம் ஆண்டு வெளியான ‘காமோஷியா’ படத்தின் மூலம் வெகுஜன சினிமாவில் அறிமுகமானார். 2021-ம் ஆண்டு அவரது நடிப்பில் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், மும்பையின் அந்தேரி சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர் சாலையில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த நடிகர் குர்மீத் சவுத்ரி அவரது நெஞ்சில் கைவைத்து அழுத்தி உடனடியாக சிபிஆர் சிகிச்சை கொடுத்தார். உடனிருந்தவர்களை அவரின் கையை தேய்துவிடச்சொல்லி உயிரை காப்ப்பாற்ற போராடினார். பின்பு பாதிக்கபட்டவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து ‘ரியல் ஹீரோ’ என ரசிகர்கள் குர்மீத்தை பாராட்டி வருகின்றனர். சமயோஜித சிந்தனை, மீட்பு நடவடிக்கை மூலம் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற போராடியுள்ளீர்கள் என்று அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in