

மும்பை: வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை டாப்ஸி. தொடர்ந்து ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’ உட்பட சில படங்களில் நடித்த அவர், தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் அவர், ஷாருக்கானுடன் ‘டுங்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில், ‘ஏலியன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் டாப்ஸி, மெர்சிடிஸ் மெபேக் ஜிஎல்எஸ் மாடல் சொகுசுக் காரை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.3.5 கோடி . அவர் புதிய சொகுசு காருடன் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன