அனுராக் காஷ்யப் படத்துக்காக உடைமைகளை விற்று குத்துச்சண்டை பயின்ற நடிகர்

அனுராக் காஷ்யப் படத்துக்காக உடைமைகளை விற்று குத்துச்சண்டை பயின்ற நடிகர்
Updated on
1 min read

பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப்பின் படத்தில் நடிப்பதற்காக நடிகர் ஒருவர், தனது உடைமைகளை விற்று குத்துச்சண்டை பயிற்சி எடுத்துள்ளார்.

பாலிவுட் பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் முக்காபாஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியிருக்கிறார் வினீத் குமார் சிங்.

படத்தில் அவருக்கு குத்துச்சண்டை வீரர் கதாபாத்திரம். குத்துச்சண்டை வீரராக நடிப்பதற்கு பயிற்சி பெற பணத்திற்காக தனது உடைமைகளை விற்று இருக்கிறார்.

தேவ்.டி, குலால், அக்லி என வித்தியாசமான படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது இயக்கியுள்ள முக்காபாஸ் திரைப்படம் வரும் 2018-ம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது. இப்படம் குத்துச் சண்டை வீரரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வீனித் குமார் சிங் குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார்.

இந்த நிலையில் முக்காபாஸ் திரைப்படம் உருவானது பற்றியும் இத்திரைப்படத்துக்காக படத்தின் நாயகன் வீனித் சிங் அர்ப்பணிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அதில், காஷ்யப் வீனித்திடம் நீங்கள் குத்துச்சண்டை வீரராக உண்மையாக பயிற்சி பெற்றால் மட்டுமே இந்த முக்காபாஸ் திரைப்படம் சாத்தியப்படும் என்று கூறினேன். உடனே அன்றைய இரவே வீனித் தன் உடமைகளை விற்றுவிட்டு குத்துச் சண்டை வீரராக பயிற்சி பெற சென்றுவிட்டார்.

ஆரம்ப நாட்களில் வீனித் குத்துச் சண்டை வீரர்களால் வெறும் நடிகராகவே பார்க்கப்பட்டார். ஆனால் நாளடைவில் அவர்கள் அவரை குத்துச் சண்டை வீரராக ஏற்றுக் கொண்டனர். இப்படத்திற்காக வீனித் அர்ப்பணிப்புடன் பணியாற்றி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

முக்காபாஸ் திரைப்படத்தில் வீனித் சிங் குத்துச் சண்டை வீரராக தொடங்கிய பயணம் பற்றி படக்குழு வெளியிட்ட  வீடியோ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in