இன்றைய உலகிற்குத் தேவை அடுத்தவர் மீதான கரிசனம்: இந்தி நடிகை ஸ்வாரா பாஸ்கர்

இன்றைய உலகிற்குத் தேவை அடுத்தவர் மீதான கரிசனம்: இந்தி நடிகை ஸ்வாரா பாஸ்கர்
Updated on
1 min read

அனுதாப உணர்வைக்கூட அலட்சியப்படுத்துவதுதான் இன்றைய உலகின் சோகமாக இருக்கிறது என்று நடிகை ஸ்வாரா பாஸ்கர் கூறியுள்ளார்.

ஸ்டார் பிளஸ் சேனலில் ஆங்கிலத்தில் வந்துகொண்டிருந்த 'டெட் டார்க்ஸ் இந்தியா நயீ சோச்' இனி இந்தி மொழியிலும் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் முதன்முதலாக தோன்றி தனது கருத்துக்களை வழங்க உள்ளார் நடிகர் ஷாருக்கான்.

நடிகர் ஷாருக்ககானுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வெளியுட்டுள்ள ஓர் அறிக்கையில் ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளதாவது:

கருத்துக்களை பரப்புவதற்கு மக்களை ஊக்குவியுங்கள். அவற்றைக் கொல்ல வேண்டாம். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கேள்விகளைக் கேட்க மக்கள் பயப்படுவதில்லை. அவர்களையும் நான் வாழ்த்துகிறேன். இந்த ஆர்வம் இருப்பது தவறல்ல. நான் கேள்வி கேட்பதுதான் என் முன்னேற்றத்திற்கு வழி.

உலகிற்கு இப்போது தேவைப்படுவது ஒன்றுதான், அது பரிவுணர்வு. இந்த உணர்ச்சியை நாம் புறக்கணித்து வருகிறோம் என்பது வருத்தமளிக்கிறது, என்று ஸ்வாரா தனது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த குறிப்பில், "நில் பேடே சன்னாடா", "ஆரஹாவின் அனார்கலி" மற்றும் "கேள்... அமயா" போன்ற படங்களில் ஸ்வாரா சில வலுவான கருத்துக்களை வெளிப்படுத்திய வேடங்களில் நடித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

'டெட் டார்க்ஸ் இந்தியா நயீ சோச்' நிகழ்ச்சி இன்றுமுதல் (ஞாயிற்றுக்கிழமை) ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in