மகளின் முதல் படத்தால் மகிழ்ச்சியும், கவலையும்: ஸ்ரீதேவி

மகளின் முதல் படத்தால் மகிழ்ச்சியும், கவலையும்: ஸ்ரீதேவி
Updated on
1 min read

தனது மகள் ஜான்வி கபூர் முதல் படத்தில் நடிப்பது தனக்கு கவலையும், மகிழ்ச்சியும் கலந்தே தருகிறது என நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், 'தடக்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார். கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்தப் படம், மராத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'சாய்ராட்' படத்தின் ரீமேக். நாயகனாக, ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டெர் நடிக்கிறார்.

இந்தப் படம் பற்றி பேசிய ஸ்ரீதேவி, "ஜான்வி நடிக்க ஆரம்பித்திருப்பது அற்புதமான உணர்வு. எல்லா அம்மாக்களை போல எனக்கும் ஆர்வம், பதட்டம், கவலை, மகிழ்ச்சி என கலவையான உணர்வுகளே இருக்கின்றன. அவள் கடும் உழைப்பாளி. அர்ப்பணிப்போடு இருப்பவள்." என்று கூறியுள்ளார்.

ஷஷாங்க் கைதான் இயக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் ஜூலை மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in