அனுஷ்கா சர்மாவுக்கு பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது

அனுஷ்கா சர்மாவுக்கு பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது
Updated on
1 min read

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு 'பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

'பிகே', 'ஜப் டக் ஹை ஜான்', 'ஏ தில் ஹை முஷ்கில்' ஆகிய படங்களில் நடித்த அனுஷ்கா, சைவப் பிரியர். வான வேடிக்கைகள், பட்டாசுகளின் தாக்கங்களில் இருந்து நாய்களைக் காப்பாற்றியதற்காகவும் வண்டிகளில் குதிரையைப் பூட்டி இழுக்கும் முறைக்கு எதிராகப் போராடியதற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய பீட்டா அமைப்பின் இணை இயக்குநர் சச்சின் பங்கேரா, ''அனுஷ்கா சர்மா பெருமைக்குரிய விலங்குகள் உரிமை காப்பாளர். அவரின் அன்பும் முன்னெடுப்புகளும் எல்லை இல்லாதது.

அவரின் ஆரோக்கியமான சைவ உணவுப் பழக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பீட்டா அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. அதேபோல முடியும் நேரங்களில் எல்லாம் விலங்குகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

விலங்குகளைக் காப்பதில் அனுஷ்கா சர்மாவின் பங்கு தற்போது அதிகரித்துள்ளது. விலங்குகள் பாதுகாப்பகங்களுக்குச் செல்வது, அவற்றின் பணிகளைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஊக்குவிப்பது, பட்டாசு மற்றும் வான வேடிக்கைகளால் விலங்குகள் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மும்பையில் குதிரை உள்ளிட்ட விலங்குகள் மூலம் வண்டி இழுப்பதைத் தடை செய்யக் கோருவது ஆகிய பணிகளை அனுஷ்கா முன்னெடுத்துள்ளார்.

அனுஷ்கா சர்மா நாயொன்றைத் தத்தெடுத்து, ட்யூட் (Dude) என்று பெயரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in