பத்மாவதி எதிர்ப்பு விரிவடைவது அதிர்ச்சியாக உள்ளது: சோனம் கபூர்

பத்மாவதி எதிர்ப்பு விரிவடைவது அதிர்ச்சியாக உள்ளது: சோனம் கபூர்
Updated on
1 min read

'பத்மாவதி' எதிர்ப்பு விரிவடைவதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்து இருக்கிறேன். எனக்கு இது நகைச்சுவையாக உள்ளது. இம்மாதிரியான சில இந்தியர்களை நினைக்கும்போது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் காஷ்டிரிய சமூகத்தினர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபிகா படுகோன் தலைக்கு ரூ 5 கோடி அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கூட்டம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை ஹரியாணா மாநிலம் பாஜக தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுரஜ் பால் அமு பேசும்போது, 'தீபிகா, சஞ்சய் லீலா பன்சாலி தலைக்கு ரூ 10 கோடி அறிவித்துள்ளார்' என்றார்.

இதுகுறித்து பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், '' 'பத்மாவதி' எதிர்ப்பு விரிவடைவதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்து இருக்கிறேன். எனக்கு இது நகைச்சுவையாக உள்ளது. இம்மாதிரியான சில இந்தியர்களை நினைக்கும்போது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது''என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in