

பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கி 24 ஆண்டுகளைக் கடந்திருப்பதை நம்பவே முடியவில்லை என ஹில்பா ஷெட்டி தெரிவித்திருக்கிறார்.
1993-ல் 'பாஸிகர்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் ஷில்பா. ஷாருக் கான் நாயகனாக நடித்த அப்படத்தில், கஜோலும் நாயகியாக நடித்தார். அதன் பின்னர், திரை வாழ்வில், கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடித்தார் ஷில்பா. அதன் பின்னர், யோகா வீடியோ, செலிபிரிட்டி பிக் பாஸ் (UK), சின்னத்திரை தயாரிப்பாளர் என தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
கடந்த ஞாயிறன்று ஷில்பா தனது டிவிட்டர் பக்கத்தில் “நம்பவே முடியவில்லை.. பாஸிகர் வெளியாகி 24 ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் இன்னும் 24 வயதினளாகவே உணர்கிறேன்.!” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, ஷில்பாவின் கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா “ அன்பு ஷில்பா, பாலிவுட்டில் 24 வருடங்களைக் கடந்ததற்கு வாழ்த்துகள். ஒரு வயது இருக்கும்போதே நடிக்க வந்துவிட்டீர்களா? இன்னுமும் பரபரப்பாக இருக்கிறீர்கள்! ஷாருக் கான் ஒரு கட்டிடத்திலிருந்து உங்களைத் தூக்கி எறிந்தார் (பாஸிகர் படத்தில்). விழுந்து, சட்டென எழுந்து விட்டீர்கள்!” என பாராட்டியுள்ளார்.
ஷில்பா தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். குஷி படத்தில் விஜய்யுடன் ‘மேக்கரீனா’என்ற பாடலுக்கு நடனமாடினார்.