எப்போது திருமணம்? - டாப்ஸி சுவாரஸ்யம்

எப்போது திருமணம்? - டாப்ஸி சுவாரஸ்யம்
Updated on
1 min read

மும்பை: சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை டாப்ஸி, கடந்த சில மாதங்களாக அதில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த டாப்ஸி, ‘நான் இன்னும் தாய்மை அடையவில்லை. அதனால் இப்போது என் திருமணம் இருக்காது. அதுபற்றி உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்” என்று சிரித்தபடி கூறினார்.

நடிகை டாப்ஸி, பேட்மின்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in