ஜவான்: நயன்தாரா தோற்றம் வெளியீடு

ஜவான் படத்தில் நயன்தாரா
ஜவான் படத்தில் நயன்தாரா
Updated on
1 min read

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்.7-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நயன்தாராவின் தோற்றத்தை ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். கேப்ஷனாக ‘புயலுக்கு முன் வரும் இடி அவள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த தோற்றம் அவர் போலீஸ் வேடத்தில் நடிப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in